இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே கிடையாது.--வடக்கு மாகாண கடலோடிகள் சங்கம் தெரிவிப்பு

2 weeks ago



இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடக்கு மாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும், இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவுக்கு சென்ற எமது ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இந்தியாவில்

பிரதமர் மோடியை சந்தித்தபோது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

எமது மீனவர்கள் எல்லை தாண்டி இயந்திரக் கோளாறு காரணமாக சென்றதற்கே மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5 இலட்சம் குற்றப்பணமும், கடூழிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இலங்கையில் இறைமையுள்ள எமது கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாக கடற்படை இந்த நாட்டுக்கு தேவைதானா? - என்றார். 

அண்மைய பதிவுகள்