கிளிநொச்சி, முகமாலை பகுதியில் வீதியில் தேங்கிக் கிடந்த வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
3 months ago

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முகமாலை வடக்கு, பளையைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் முகமாலை வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதியால் பயணித்தபோது வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
