சிந்துஜா உயிரிழந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், மருத்துவ மாதுக்கள் இருவரும் நேற்றுமுதல் பணிநீக்கம்.
மருத்துவமனையில் இளம் தாயான சிந்துஜா உயிரிழந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், மருத்துவ மாதுக்கள் இரு வரும் நேற்றுமுதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் களுக்கான குற்றச்சாட்டுப் பத்திரங்கள் இன்று கையளிக்கப் படவுள்ளன.
மன்னார் மருத்துவமனையில் கடந்த மாதம் 27ஆம் திகதி சேர்க்கப்பட்ட இளம் தாயான ம, சிந்துஜா, பிரசவத்தின் பின்னரான அதிக குருதிப் போக்கால் உயிரி ழந்திருந்தார். இவரது உயிரிழப்பு மருத்துவ கவனவீனத்தால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் கடந்த 5 ஆம் திகதி 5 பேர்கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக் குழு அன்றையதினமே மன்னார் மாவட்ட மருத்துவ மனைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் கூடி ஆராய்ந்து தமது ஆரம்ப புலன் விசாரணை அறிக்கையை. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலரிடம் கையளித்தது. விசாரணைக் குழு 12 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் 21 ஆவணங்களையும் விசாரணைக் குழு திரட்டியுள்ளது. விசாரணைக்குழு தனது அவதானத்தில், சிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது விடுதி இல. 5 மற்றும் 6 க்கு ஒன்கோல்' மருத்துவ உத்தியோகத்தர்கள் அங்கிருக்கவில்லை. விடுதிக்குள் உள்ள 'ஒன்கோல்' மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான அறையிலும் அவர்கள் தங்கியிருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கான விடுதிகளில் தங்கியிருந்துள்ளார்கள். இந்தச் சம்பவம் நடக்கும் வரையில் 'ஒன்கோல்' மருத்துவ உத்தி யோகத்தர்களுக்கான கடமைநேர அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
அதேநேரம் இரண்டாவது 'ஒன்கோல்' மருத்துவ உத்தியோகத்தர்கள் எவரும் அங்கு நியமிக்கப்பட்டிருக்கவுமில்லை. தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ மாதுக்கள், சிந்துஜா சேர்க்கப்பட்ட அதிகாலை 2.30 இலிருந்து காலை 7 மணி வரையில் அவரைக் கண்காணிக்கவில்லை. தாதிய உத்தியோகத்தர், மருத்துவ மாதுக்கள் 'ஒன்கோல்' மருத்துவ உத்தியோகத்தர் வந்து பார்வையி டாத நிலையில், 'ஒன்கோல்' தாதி, ஒன்கோல் மேற்றன், ஒன்கோல் மகப்பேற்று மருத்துவர் மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.
விடுதிப் பணியாளர்களிடையே தொடர்பாடல் மோசமான நிலையில் உள்ளது. மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் ஆகியோர் மிக மோசமான எதிர்மறைச் சிந்தனை உடையவர்களாக உள்ளனர். அதேவேளை, வெளிநோயாளர் பிரிவு மருத்துவர் நோயாளியைப் பார்வையிட வேண்டும் என எழுதியுள்ளமையை தாதிய உத்தியோகத்தர் தெரியப்படுத்திய பின்னரும் 'ஒன்கோல்' மருத்துவ உத்தியோகத்தர் பார்வையிட வில்லை என விசாரணைக் குழு தனது அவதானத்தைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு அமைவாக, சிந்துஜாவின் உயி ரிழப்பு தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என்றும் இந்த உயிரிழப்புக்கு மருத்துவ அலட்சியமே காரணம் எனவும் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அன்றைய இரவுக் கடமைக்குரிய மருத்துவ உத்தியோகத்தரான ரந்தெனிய, தாதிய உத்தியோகத்தர்களான விஜயசிங்க, குரூஸ், மருத்துவ மாதுக்களான விஜயரதி செல்வா, ரத்னம் எமில்டா ஆகியோரை விசாரணை முடிவடையும் வரை உடனடியாக குறித்த விடுதியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இவர்கள் 5 பேருக்கும் எதிராக மருத்துவ அலட்சியத்துக்காக தனித்தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 விடயங்களை விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நியமனம் பெற்றுள்ள தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ மாதுக்கள் ஆகியோருக்கு நேற்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிக பணி நீக்கக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்களுக்கான குற்றச்சாட்டுப் பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்படவுள்ளன. அதேவேளை இந்த விசாரணை அறிக்கை காழும்பு சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ ர்களின் நியமனம் கொழும்பு சுகாதார அமைச்சுடன் தொடர்புடையது என்பதால் அவர் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.