இந்தியாவின் 76வது குடியரசு தினமான நேற்று யாழ்.பலாலியில் உள்ள இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி
2 months ago










இந்தியாவின் 76வது குடியரசு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் யஹம்பத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தனர்.
அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின்போது, உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவிடம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது.
அங்கு சென்றே இந்திய துணைத்தூதுவர் தலைமையிலான இந்திய தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
