தமிழரின் வடக்கு, கிழக்கை கிழக்கை தேசமாக அங்கீகரியுங்கள்!இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

5 months ago


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமிழரின் வடக்கு, கிழக்கை தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களை கோருகின்றது இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம்!

அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வரு மாறு, நாட்டின் பொருளாதாரத்தை பிழையான விதத்தில் நிர்வகித்தமை, ஊழல், பொருளா தார ரீதியில் எந்த விதத்திலும்

நியாயப்படுத்த முடியாத திட்டங்க ளுக்கான செலவினங்கள், அரசியல் அதிகாரத்தை அனுபவித்தவர்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற் கான உரிய ஏற்பாடுகள் இல்லாதமையே நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.

வலுவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண் டும். வல்லமைக்கு மேலான ஜனாதிபதி முறை ஏனைய ஜனநாயக நிறுவனங்களை செயலிழக்க செய்கின்றது. கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் அநேக வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத் தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக வாக்குறுதி யளித்ததையும் தேர்தலில் வென்ற பின்னர் அதனை மறந்துவிடுவதையும் அவதானித்துள்ளோம். நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது குறித்து அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் காணப்பட்டமையே நாட்டில் யுத்தத் துக்கும் இனக்குழுக்கள் மத்தியில் ஏற்பட்ட துருவயமப்படுத்தலுக்கும் கார ணம். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்னைகள், அவர்கள் எதிர்கொண்ட பாரபட்சங்கள் என்பவற்றுக்கு அரசியல் வழியிலேயே தீர்வு காணலாம். அரசியல் தீர்வு என்பது ஐக்கியமான தேசம் என்ற கட்டமைப்புக் குள் வடக்கு, கிழக்கை ஒரு தேசமாக கருதுவதுடன், குறிப்பிடத்தக்க சுயாட்சி, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றுள் ளது.