கடத்தல், தடுத்து வைத்தல் மற்றும் பலவந்தமாக காணாமல் போனமை தொடர்பான விசாரணை தொடர்பில் கடற்படைக் கப்டன் கைது

1 month ago




13 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் பலவந்தமாக காணாமல் போனமை தொடர்பான விசாரணை தொடர்பில் கடற்படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் கப்டன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நவம்பர் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கிரியுல்ல மற்றும் மஹரகம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவராவார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூற்றுப்படி, 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில், கடு பொத, வஜிரவத்தையைச் சேர்ந்த கணேரலாலாகே சாந்த சமரவீர என்ற நபர் ஒருவர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் போனார்.

இவ்வழக்கில் இதற்கு முன்னர் அளவ்வ பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி, அளவ்வ பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் அப்போதைய பிரதம பொலிஸ் பரிசோதகர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, இந்த வருடம் ஜூன் மாதம் 4 ஆம் திகதி, சம்பவத்தின் போது அளவ்வ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் தற்போது பிணையில் உள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விரிவான விசாரணைகள் இருந்த போதிலும், காணாமல்போன நபரின் கதி என்னவென்று தெரியவில்லை.