யாழ்.மாநகர சபையின் புதிய கட்டடத்தை முழுமையாக வழங்குகின்றபோதே சேவைகளை முன்னெடுக்கலாம். ஆணையாளர் தெரிவிப்பு

2 months ago



யாழ். மாநகரசபையின் புதிய கட்டடத்தை முழுமையாக வழங்குகின்றபோதே சேவைகளை முன்னெடுக்கலாம்.

கீழ்த்தளத்தை மாத்திரம் நகர அபிவிருத்தி அதிகாரசபை கையளித்தாலும் எம்மால் அங்கு செயற்பட முடியாது என யாழ். மாநகரசபை ஆணையாளர் கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர சபையின் புதிய கட்டடம் எப்பொழுது கையளிக்கப்படும் என அர்ச்சுனா எம்.பி. எழுப்பிய கேள்விக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் அதன் கீழ்த் தள வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார் சபையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இது குறித்துத் தற்போது மாநகரசபை ஆணையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மாநகர சபையிடம் 27 கிளைகளின் கீழ் பல்வேறுபட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக அமைக்கப்படும் மாநகர சபையின் கட்டடத்தின் கீழ்த் தளத்தில் மூன்று கிளைகளை மாத்திரமே நடத்த முடியும்.

முழுமையாக வழங்கப்படுகின்ற பொழுதே அனைத்து கிளைகளையும் உள்ளடக்க முடியும் - என்றார். 

அண்மைய பதிவுகள்