சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 58 ஓட்டங்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

3 months ago


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 58 ஓட்டங்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் பங்களாதேஷூக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26 ஆயி ரத்து 942 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இவர் இந்தத் தொடரில் 58 ஓட்டங்கள் அடிக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ஓட்டங்கள் அடித்ததே உலக சாதனையாகவுள்ளது.



அண்மைய பதிவுகள்