கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகை இன்று தொடக்கம் 10 நாள்கள் கொண்டாட்டம்.

4 months ago


'ஓணம் ஆரம்பம்' கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகை இன்று தொடக்கம் 10 நாள்கள் கொண்டாட்டம்

மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்

தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாள்கள் ஓணமாகக் கொண்டாடப்படுவது வழமை.

ஓணம் அல்லது ஆவணி திரு வோணம் என்பது இந்தியாவின். தென் தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா ஆகும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.

கேரளாவின் மிகப்பெரிய பண்டிகை களில் ஒன்றான ஓணம் பண்டிகை முதன்மையானது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓண விழா கொண்டாடப்படும்.

பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந் திருக்கும் கேரளத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கேரள மக்களால் சாதி, மத வேறுபாடுகளின்றி கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர்.

ஓணத் திருநாள் கொண்டாடப்படும்10 நாள்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள். இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக் கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ. சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் வழங்கப்படும். நடைபெறும் திருவிழாவில், ஒவ் வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுவார்கள்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.

ஓணம் பண்டிகையின் நான்காம் நாளான விசாகத்தை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்புத் தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத் தப்படும். இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாட லைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக் கேட்டார்), ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்தி ராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடையும்.

இந்த ஆண்டுக்கான ஓணம் கொண்டாட்டம் இன்று தொடங்கி 15ஆம் திகதி முடிவடையவுள்ளது.