இந்தியப் பிரஜை ஒருவர் நேற்று சீதுவ, லியனகே முல்லவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

3 months ago



இலங்கை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த 36 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் நேற்று சீதுவ, லியனகே முல்லவில் உள்ள வீட்டுத் தொகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இந்தியப் பிரஜை சீதுவை வீட்டு வளாகத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் என்று முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.