யாழ்.கோப்பாயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு ஒரு சிறுமி உட்பட மூவர் கைது

2 months ago



யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று முற்றுகையிடப்பட்டு ஒரு சிறுமி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த பாலியல் விடுதி முற்றுகையிடப்பட்டது.

விடுதியில் தங்கிநின்ற 17 வயதுடைய சிறுமியொருவர், 26 வயதுடைய யுவதியொருவர் மற்றும் 38 வயதுடைய ஆண் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.




அண்மைய பதிவுகள்