இலங்கையில் நவம்பரில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் விசேட கரிசனை - தமிழரசுக் கட்சி முடிவு

3 months ago


இலங்கையில் நவம்பரில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் விசேட கரிசனை - இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு

நவம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை செலுத்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திரு கோணமலை, அம்பாறை மாவட்டங்களில்

ஓர் உறுப்பினர் மட்டுமே தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பில் அந்தந்த மாவட்டக் கிளைகளுடன் பேசி ஆராய்ந்து முடிவு ஒன்றை எடுப்பதற்கு தமிழ் அரசின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. (ஐ)