ஜ. நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் - பிரிட்டன் பிரதமர் வலியுறுத்து
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய கெய்ர் ஸ்டார் மர், "ஐ.நா. பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அரசியல் காரணமாக அது முடக்கப்படக் கூடாது. ஐ. நா. சீர்திருத்தப்பட வேண்டும். அதிக பிரதிநிதித்துவத்துடன், அதிகம் பதிலளிக்கக் கூடியதாக அது திகழ வேண்டும். நியாயமான விளைவுகளுக்கு மட்டுமல்ல, அவற்றை அடைவதில் நியாயமான பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் உருவாக்குவோம்.
ஐ. நா. பாதுகாப்பு சபைக்கும் இது பொருந்தும். அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக, அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக மாற வேண்டும்.
பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஐ. நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். மேலும், ஆபிரிக்காவின் பிரதிநிதித்துவமும் அதில் இருக்க வேண்டும். ஐ. நா. பாதுகாப்பு அவை இவ்வாறு மாறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்." என தெரிவித்தார்.