யாழ்.வடமராட்சி மருதங்கேணி பிரதேசத்தில் 391 குடும்பங்கள் பாதிப்பு.-- பிரதேச செயலர் கே.பிரபாகரமூர்த்தி தெரிவிப்பு
1 month ago
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 391 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தி தெரிவித்தார்.
364 குடும்பங்களைச் சேர்ந்த 1069 பேர் உறவிர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். நான்கு நலன்புரி முகாம்களில் ஏனையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடத்தனை - பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், அம்பன் பிரதேசத்தில் சிவனொளி முன்பள்ளியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும், மருதங்கேணி கிராம சேவகர் அலுவலகத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேருமாக 27 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் நான்கு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.