யாழ். தட்டாதெரு சந்திக்கு அருகில் மருத்துவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் டிக்கியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இருவர் கைது
யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் கோவில் - தட்டாதெரு சந்திக்கு அண்மையில் நேற்று முன்தினம் மாலை மருத்துவர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் டிக்கியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இருவர் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது சி.சி.ரிவி கமராவில் பதிவாகிய நிலையில், இருவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், நேற்றுக் காலை நல்லூர் அரசடிப் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்படும்போது 10 போதை மாத்திரைகளையும் 240 மில்லி கிராம் ஹெரோயினையும் உடைமையில் வைத்திருந்தனர்.
விசாரணைகளின் போது, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் போதைப் பொருள் வாங்குவதற்காக சிறுசிறு திருட்டுக்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.