இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு
2 months ago

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியைக் கறுப்பு நாளாக நினைவுகூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் உலகுக்கு மடுமல்லாமல் அநுர அரசுக்கும் எடுத்துக் கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இறுதி யுத்த காலப் பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் இன்று யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
