இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு திட்டம், பிரதமர் தெரிவிப்பு
6 months ago

ஜனாதிபதி அநுரகுமார திஸ நாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உறுதி செய்யும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் முன்னேறும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் கவனம் செலுத்தவுள்ளது.
மேலும் இடையூறு இல்லாத சுமூகமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தி விரும்புகிறது-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
