
வாரத்தின் தொடக்கத்தில் வெப்பமான காலநிலையை எதிர்கொண்ட டொரொண்டோ, நாளை முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும்.
ஆனால், இரவு 0 பாகை செல்சியதாக வரை குறையும். மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்ர் வரை பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி வீழ்ந்ததன் பின்னர், நகரம் காணும் முதல் பனிப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேகமூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
