புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காருடன் தனது முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா.
புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காருடன் தனது முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா.
செப். 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் அவர் தனது முதல் பிரசார கூட்டத்தை கம்பஹாவில் நேற்று முன்தினம் நடத்தினார்.
இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கே விடுதலைப் புலிகள் தன்மீது தாக்குதல் நடத்தியபோது தான் பயணித்திருந்த காரை அவர் கொண்டு வந்திருந்தார்.
2006 ஏப்ரல் 25ஆம் திகதி அப்போ தைய இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா மீது கொழும்பில் கரும்புலித் தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் அவரின் மெய்ப் பாதுகாவலர்கள் 9 பேர் உயிரிழந்தனர். சரத் பொன்சேகாவும் படுகாயமடைந்தார். இதனால், சுமார் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது.
இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி வாக்குகளை ஈர்க்கும் நோக்கிலேயே அவர் இந்தக் காரை பிரசாரக் கூட்டத் துக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.