பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரன், மதத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.
5 months ago


இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
நல்லை ஆதீன குருமுதல்வர் சிறீல சிறீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பத்மதயாளன் அடிகளார் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி. ஆறுதிருமுருகன் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றதோடு, அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
