மீனவர்கள் எவருமின்றி 5 ஆம் தீடையில் நின்ற இந்திய விசைப் படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் மீட்டு மன்னாருக்குக் கொண்டு வந்தனர்.

1 month ago



மீனவர்கள் எவரும் இன்றி 5 ஆம் தீடையில் நின்ற இந்திய விசைப் படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் மீட்டு மன்னாருக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு என நம்பப்படும் இந்தப் படகு இலங்கைக் கட்டுப்பாட்டில் உள்ள 5 தீடை அருகே மீனவர் எவரும் இன்றி நின்ற சமயமே நேற்று புதன்கிழமை இரவு கடற்படையினரால் மீட்கப்பட்டு மன்னார் இறங்குதுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் படகில் அதிக மீன்களும், எரிபொருளும் காணப்படுகின்றபடியால் இயந்திரக் கோளாறு காரணமாகத் தமிழக மீனவர்கள் படகைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

கடற்படையினர் மீட்டு வந்த இந்தப் படகு மன்னார் கடற் றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.