கிளிநொச்சி, தர்மபுரம் உழவனூர் பகுதியில் 1 கிலோ 750 கிராம் கேரளக் கஞ்சாவுடன் முதியவர் ஒருவர் கைது
4 months ago

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் 1 கிலோ 750 கிராம் கேரளக் கஞ்சாவுடன் 64 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உழவனூர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், குருநாகல் கொண்டு செல்வதற்காக குறித்த முதியவர் தனது பயண பொதியில் மறைத்து எடுத்துச் சென்றவேளை கைது செய்யப்பட்டார்.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான சந்தேக நபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
