வடக்கு - கிழக்கில் உள்ள இளம் கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு.
வடக்கு - கிழக்கில் உள்ள இளம் கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது.
வடக்கு - கிழக்கு இளம் கடற்றொழிலாளர் கூட்டு எனும் புதிய அமைப்பின் மூலம் யாழ்ப்பாணத்தில் கூட்டு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்தும் இளையோர் சமூகமளித்தனர்.
அனைவரையும் ஒன்றிணைத்து மிகவும் பெறுமதியான கூட்டு கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த கட்ட தலைமுறையினர் எவ்வாறு கடல் வளத்தினையும், கடற்றொழிலாளர்களின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் கடற்றொழில் சொத்துக்களையும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.