மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் மறுக்கப்படுவதாக மனித உரிமை யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிப்பு

3 months ago



அரசமைப்பு மற்றும் சுற்றுநிரூபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அவை மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதிலிருந்து தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வது வரை அவர்களுக்கான ஏற்பாடுகள் அரசமைப்பு மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்டும் அவர்கள் நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாகக் கூற வேண்டுமானால் இலங்கை அரச வேலைவாய்ப்பைப் பெறுபவர் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும் எனக் கூறப்படுகிறது.

தேக ஆரோக்கியம் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

ஆகவே வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம். பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில் அவர்களின் தேவைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழு விசேட கவனம் செலுத்தும் - என்றார்.