காசாவில் பட்டினியால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்து வருகின்றனர் என்று ஐ. நா. வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது ஒருவகையில் பலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காசா பகுதி மக்கள் தங்களின் வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐ.நா. சபை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக் கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடி யாது என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என ஐ. நா. வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸை காக்கும் நோக்கில் இப்படி தன்னிச்சையாக மைக்கேல் ஃபக்ரி உள்ளிட்ட ஐ. நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிடுகின்றனர் என்று இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ. நா. வல்லுநர்கள் தெரிவித்துள்னர். ஆறு மாத குழந்தை மற்றும் 13 வயது சிறுவன் என மூன்று பேர் உயிரிழ ளனர். மே 30, ஜூன் 1 மற்று ஜூன் 3 ஆகிய திகதிகளில் அவர்கள் உயிரிழந்தனர். இதில் இருவர் மருத்துவமனையிலும், ஒருவர் முகாமிலும் உயிரிழந்தனர்.
மேலும், காசா விவகாரத்தில் உலக நாடுகள் முன்பே தலையிட்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்திருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டு இருக்கும் என கூறியுள்ளனர்.