இலங்கையர் ஒருவர் சென்னை விமானத்தில் கைது

6 months ago

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தியாவின் கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கடவுச் சீட்டை காண்பித்தபோது, கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கையிலிருந்து ஏதிலியாகத் தமிழகம் சென்று வசித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்