முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்டிருந்த ஆடம்பர பங்களாக்கள் பல நிறுவனங்களின் பொருட்களால் நிரம்பியுள்ளன

3 months ago



முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு கொழும்பில் வழங்கப்பட்டிருந்த ஆடம்பர பங்களாக்கள் பல நிறுவனங்களுக்கு சொந்தமான பொருட்களால் நிரம்பியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளதாக அரச நிர்வாக உள்துறை நீதித்துறை மாகாண சபைகள் உள்ளூ ராட்சி அமைச்சுக்களின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பங்களாக்களில் காணப்படக்கூடிய பொருட்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்து முடிக்கும் வரையில், அவற்றை அரசாங்கம் மீளவும் பொறுப்பேற்கத் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாக்களில் உள்ள குறித்த பொருட்களை விரைவில் ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சு, குறித்த நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு பல தனியார் நிறுவனங்கள் சொந்தமாக உள்ளமையினால் அந்த நிறுவனங்களில் இருக்கும் கதிரை, மேசை, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை அரச பங்களாக்களில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கு              வழங்கப்பட்டிருந்த அரச பங்களாக்களில் நேற்று வரையில் 10 பங்காளாக்கள் மாத்திரமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்