சமாதான தூதுவரா எரிக் சொல்ஹெய்ம்?

சமாதானம் நிலவுகிறது என்று 20 வருடங்கள் கழித்து இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பதில் இருந்து அவரின் இலங்கை தொடர்பான நகர்வு பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது போர்க்காலங்களில் சமாதான தூதுவராக வந்த எரிக் சொல்ஹெய்ம் தமிழர்களுக்கு சமாதானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாரோ இல்லையோ தமிழர்களை மீண்டும் நிர்க்கதியில்லா நிலைக்குள் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.

இலங்கையில் மூன்று தசாப்த காலம் தமிழர்கள் தமது அரசியல் தீர்வை வலியுறுத்தி இலங்கை அரச படைகளுக்கு எதிராக பெரும் போரை மேற்கொண்டார்கள். போர் தீர்வாக அமையாது என்று சமாதானத்தை வலியுறுத்தும் நோர்வே நாடு இலங்கையில் போரை நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு வித்திட்டது.

சமாதான பேச்சுகள் பல நாடுகளில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தைக்கு நடுவராக இருந்த எரிக் சொல்ஹெய்மினால் சமாதான பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை என்று சொல்வதா? அல்லது இலங்கை அரசுக்கு சார்பாக நின்றதா? அல்லது விடுதலைப் புலிகளின் போரை தொய்வடையச் செய்வதற்கான செயற்பாடாக பார்ப்பதா? என்று தான் கருத முடியாமல் இருக்கிறது.





கடந்த வாரம் இலங்கை வந்த எரிக்சொல்ஹெய்ம் வடக்குமாகாணத்தில் பல இடங்களுக்கு சென்று இடங்களை பார்வையிட்டுள்ளார். சமாதான பேச்சு வார்த்தைக்கு அத்திவாரமிட்ட கிளிநொச்சிக்கும் சென்று விடுதலைப் புலிகளின் அலுவலகங்களைப் பார்வையிட்டுள்ளார்.

பார்க்கும் போது அவர் மனம் என்ன நினைத்திருக்கும். சமாதானப் பேச்சுவார்த்தை காலப் பகுதியில் போராளிகளின் மனநிலையை மாற்றி அவர்களை வேறு உலகுக்கு கொண்டு சென்றாரா? என்ற சந்தேகம் எழுவதற்கு கருணா பிரிவு காரணமாக அமைந்தது. போரை நலினமடையச் செய்த சமாதான பேச்சு வார்த்தை.

13 தான் தீர்வு என்று சொல்வதற்கு இவர் யார் என்று அரசியல்வாதிகள் உட்பட சட்டத்தரணிகள் வரை பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கோமாளி என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வந்து சென்றிருக்கலாம். சமாதானம் நிலவுகிறது, 13 தீர்வு என்று இவர் வெளியிட்ட கருத்துக்களால் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம் பெற்றிருக்கிறார் என்றால் இலங்கை அரசுக்கு இவர் செய்த உதவிக்கு கிடைத்த பரிசு. அதாவது சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி விடுதலைப் புலிகளின் போர் வல்லமையை சோர்வடையச் செய்து போரை முடிவுக்கு கொண்டு வந்து தமிழர்களை மீண்டும் அடிமை யுகத்துக்கு கொண்டு சென்ற பெருமை இவரை சேரும்.









தேசத்துரோகி என்று சொல்வதைத் தவிர இவரை எப்படி அழைப்பது. தமிழர் அரசியல் தென்னிலங்கை சக்தியிடம் தோற்றுப் போக, போர் தான் வழி என்று இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி சம்பலத்துடன் இருந்த போது, சமாதானப் பேச்சுவார்த்தை என்று விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை சர்வதேச உதவியிடன் உடைத்து, தமிழர்களின் சக்தியை இல்லாமல் செய்து, தமிழர்களின் பிரச்சினை முடிவின்றி தொடர்வதற்கு காரணமாக இருந்த எரிக்சொல்ஹெய்ம் தமிழர் வரலாற்றில் கரை படிந்த ஒருவர் என்பது உண்மை.