இலங்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கும் ஊக்குவிப்பை நிறுத்தவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

விசேட பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முழுமையாக நிறுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டு வரும் விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
முன்னாள் விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் 2024 செப்ரெம்பர் 22 பின்னர், விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.
இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் 2024 செப்ரெம்பர் மாதம் 22 வரையே உரித்தாகும்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை-என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
