ஐ.எம்.எப். ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 வரை செயற்பட வேண்டும்- அமைச்சர் பந்துல தெரிவிப்பு.
5 months ago
சர்வதேச நாணயநிதியத்துடன் தற் போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 வரை செயற்பட வேண்டும் என்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் சரி கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணயநிதியம் 700 மில்லி யன் அமெரிக்க டொலரும் உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலரும் ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொல ரும் வழங்குவதாக உறுதியளித்துள் ளன - என்றார்.