கனடாவின் பிராம்டனில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

2 months ago



கனடாவின் இந்து ஆலயம் ஒன்றிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனடாவின் பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றிற்கு இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆலய பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திர உரிமையை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கூடுதல் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்து ஆலயத்திற்கு எதிரில் கலிஸ்தான் கொடிகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, வன்முறைகள் மற்றும் குற்ற செயல்களுக்கு இடம் அளிக்கப்படமாட்டாது என பீல் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கனடிய அரசாங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைக்கு மத்தியில் இந்த போராட்டம் நடக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்