சொத்து விவரங்களை வழங்காத அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு இறுதி அறிவிப்பு

5 months ago


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இன்னும் தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான விவரங்களை சமர்ப் பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது.

ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி யுள்ளது. அத்துடன், இதுவரையில் தமது சொத்துகள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கள் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்ப ளத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு கூடுதல் கட்டணம் விதிக்க அதி காரம் உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

அண்மைய பதிவுகள்