யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6 months ago


யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு, மகேந்திரா வானின் கண்ணாடிகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது வீட் டின் மீதே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
