முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு தங்க நகைகள், பணம் என் பவை திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீடுகளின் யன்னலை உடைத்து நுழைந்தவர்களே இந்தத் திருட்டை நடத்தியுள்ளனர். தங்க நகைகள், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பவை திருடப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் காலையில் எழுந்த பின்னரே திருட்டு இடம்பெற்றமை தெரியவந்தது. விசாரணை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
