பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு
1 month ago

பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிராக தம்மால் மேற்கொள்ளப்பட்ட நியாயமாக போராட்டத்துக்காக, பொலிஸார் பழி வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டே செல்வராசா கஜேந்திரானால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து மௌனமாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நயனகித்தின் திட்டமிட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் கவனத்தில் கொள்ளவும் தலையிடவும் வேண்டும் என்று முறைப்பாட்டாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கோரியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
