பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய ஜனநாயக தமிழ் அரசு குழுவினர் மாம்பழத்துடன் மாவையை சந்தித்தனர்

2 months ago



பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்கிய ஜனநாயக தமிழ் அரசு குழுவினர் நேற்று மாம்பழத்துடன் சென்று மாவை சேனாதிராசாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

நவம்பர் 14இல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாக மாம்பழம் சின்னத்தில்                போட்டியிடுகின்றனர்.

நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்த கே.வி.தவராசா தலைமையிலான குழுவினர் நேற்று மாலை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் இல்லத்துக்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றதுடன் அவருடன் உரையாடினர்.

இதன்போது, அவர்கள் மாவை சேனாதிராசாவுக்க மாம்பழங்களையும் வழங்கி வைத்தனர்.

இந்த சந்திப்பில், ஐனாதிபதி சட்டத் தரணி கே.வி.தவராசா,                         ஈ. சரவணபவன், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



அண்மைய பதிவுகள்