1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளது.
5 months ago
1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டு அதனை இல்லாது செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், ஆனால் பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் அவற்றிற்கு இடையூராக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"MT Terra Nova" என்ற கப்பல் அதிகாலையில் பிலிப்பைன்ஸின் மத்திய நகரான Iloilo நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் ஏற்பட்டுள்ளது.