இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களால் 11,000 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்தனர்.

3 months ago


இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களால் காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்தனர் என்று பலஸ்தீன கல்வி அமைச்சு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய காஸாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை காஸா மீதான இஸ்ரேலின் போரில் 41 ஆயிரத்து 252 பேர் கொல்லப்பட்டனர். 95 ஆயிரத்து 497 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் தலைமையிலான தாக் குதல்களில் கொல்லப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1,139 ஆகவுள்ளது, அதேசமயம் 200இற்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக, கடந்த       ஒக்ரோபர் 7இல் இருந்து இதுவரை காஸா பகுதி மற்றும்                  ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் 11,001 மாணவர்கள் கொல்லப் பட்டதாகவும், 17 ஆயிரத்து 772 பேர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.




அண்மைய பதிவுகள்