புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.- சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அறியத் தருகிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
அன்று தொடக்கம் இன்று வரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கிறேன்.
வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்துள்ளேன்.
இம்முறை புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழர்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன்- என்றுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
