தமிழ்நாடு கேரள ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் காரையும், கண்டெய்னருள் மறைத்துச் சென்ற கொள்ளையர்களையும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

3 months ago


கேரள ஏ.டி.எம்.களில்            கொள்ளையடிக்கப்பட்ட பல இலட்சம் பணத்துடன், வெள்ளை நிற சொகுசுக் கார் ஒன்றையும் கண்டெய்னருள் மறைத்துச் சென்ற கொள்ளையர்களை தமிழ்நாடு பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு -நாமக்கல் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அதிவேகமாகச் சென்ற கண்டெய்னரை, சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டியில் வைத்துப் பொலிஸார் மடக்கிக் பிடித்தனர்.

அப்போது சாரதியிடம் நடத்திய விசாரணையில் கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் உள்ளது எனவும், கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கண்டெய்னர் காட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது கண்டெய்னரில் இருந்த கொள்ளையர்களை வெளியே வருமாறு பொலிஸார் வலியுறுத்தினர்.

அப்போது பொலிஸார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனால் பொலிஸார் பதில்     தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கொள்ளையர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒருவர் காயத்துடன் பிடிப்பட்டார்.

அதேவேளை, மேலும் நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதில் பொலிஸார் இருவரும் காயமடைந்துள்ளனர்.

கைதானவர்கள் ராஜஸ்தான் அரியானா தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் எனவும், அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் தெரிய வருகின்றது.

அதேவேளை, கண்டெய்னருக்குள் கார் ஒன்று இருந்துள்ளது. அத்துடன் சுமார் 66 இலட்சம் ரூபா பணம் கட்டுக்காட்டாகக் காணப்பட்டுள்ளது.

இந்தக் கார் கேரளாவில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கேரளா பொலிஸார் வழங்கிய   தகவலின் அடிப்படையிலேயே தமிழகப் பொலிஸாரால் குறித்த கும்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது எனவும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்