யாழ்.சங்குவேலியில் ஒரு கோடியே 7 இலட்சம் ரூபா பணத்துடன் பயணித்தவரைத் தாக்கிவிட்டு பணம் கொள்ளை
3 months ago
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குவேலிப் பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை ஒரு கோடியே 7 லட்சம் ரூபாவுக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தை தன்னுடன் எடுத்துச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் பணத்தை அவரிடம் இருந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.