யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி வங்கி அமைக்கப்பட்டது.

3 months ago



பசுந்தேசம் அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார கழத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி வங்கி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த குருதி வங்கிக்கு நிரந்தர மருத்துவராக மருத்துவர் பிரதீபன் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

தற்போது குருதி வங்கியானது பதிவுசெய்யப்பட்டு நேற்று (19) உத்தியோக பூர்வமாக இலங்கையின் தேசிய குருதி வங்கிகளின் இணையத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதன்முதலாக நேற்று (19) குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றது.

இந்தக் குருதிக்கொடை நிகழ்வுக்கு பசுந்தேசம் அமைப்பு, விதையனைத்தும் விருட்சம் அமைப்பு, இயற்கையின் நண்பர்கள் இயக்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் அழைக்கப்பட்டிருந்தன.

தென்மராட்சி பகுதியில் குருதிக் கொடை செய்ய விரும்புபவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குருதி வங்கியுடன் தொடர்பு கொண்டு குருதிக்கொடை வழங்குமாறு பசுந்தேசம் அமைப்பின் தலைவர் த.துளசிராம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்