
கனடாவில் சொக்லெட் ஒன்றிலிருந்து பிளேட் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு ஒன்றாரியோவில் சிறுமி ஒருவர் வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் மீட்கப்பட்டுள்ளது.
ஹலோவின் கொண்டாட்டங்களுக்காக வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் காணப்பட்டுள்ளது.
இந்த சொக்லெட் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பிரபல நிறுவனமொன்றின் சொக்லெட் வகையொன்றில் இவ்வாறு பிளேட் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இனிப்பு பண்டங்களை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தால் அவ்வாறான இனிப்பு பண்டங்களை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
