மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கும் காற்றாலை மின் திட்டத்தை மீள்பரிசீலனைக்கு தயார்.-- அரசாங்கம் நீதிமன்றில் தெரிவிப்பு
2 months ago
மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது.
விடத்தல்தீவில் அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.