ஒன்ராரியோ மாகாண பே ஒப் குயின்டே தொகுதியில் மாகாண இடைத் தேர்தல் வாக்களிப்பு நாளை (20) நடைபெறுகிறது.





ஒன்ராரியோ மாகாண பே ஒப் குயின்டே தொகுதியில் மாகாண இடைத் தேர்தல் வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமை (20) நடைபெறுகிறது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் டொட் ஸ்மித் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பெல்வில் தொகுதி நகர சபை உறுப்பினர்கள் இருவர் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர்.
புரொக்ரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக டைலர் ஓல்சொப், லிபரல் கட்சியின் வேட்பாளராக சீன் கெல்லி ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
புதிய ஜனநாயகக் கட்சியின் வேட் பாளராக அமென்டா ரொபர்ட்சன் போட்டியிடுகின்றார்.
இந்த இடைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவு செப்ரம்பர் 8 ஆரம்பித்து செப்ரம்பர் 13 வரை நடந்தது.
முன்கூட்டிய வாக்குப் பதிவில் எதிர்பார்க்கப்பட்டதை போல் குறைந்த எண்ணிக்கை வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
முன்கூட்டிய வாக்குப் பதிவில் தகுதியுள்ள வாக்காளர்களில் 7,885 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஒன்றாரியோ தெரிவிக்கிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
