அனுமதிப் பத்திரத்துக்கு முரணாகவும் அனுமதிப் பத்திரம் இல்லாமலும் மணல் ஏற்றிய வாகனங்களின் 14 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியின் பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் பகுதிகளில் நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று, ஏனைய பகுதிகளில் ஏ-9 வீதியில் நடத்தப்பட்ட சோதனையில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக மணல் ஏற்றிச் சென்ற 11 டிப்பர் சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிடிபட்ட வாகனங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மணலுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.