எம்.பி க.இளங்குமரனால் சாவகச்சேரியில் வழிமறித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் சோதனை
3 months ago

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம்
சுண்ணக்கற்களை வாகனத்தில் இருந்து அகற்றி சோதனைக்கு உட்படுத்தினர்.
மேற்படி சோதனை நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தேகத்துக்கிடமான பொருட்களும் இல்லாத நிலையில் பொலிஸார் கனரக வாகனம் மற்றும் சுண்ணக்கற்களை சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்தினர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
