6 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 months ago


யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 6 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட இரண்டு படகுகளும் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகில் நான்கு மீனவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி படகில் இரண்டு மீனவர்கள் இருந்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை அறியப்படவில்லை எனவும், அவர்களை தேடுவதற்கு கடற்படை உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்