யாழ்.வடமராட்சி - குடத்தனைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சிறப்புச் சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச்செயல்களு டன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதங்கேணிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இந்தச் சிறப்புச் சுற்றிவளைப்பும் கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாள்வெட்டு, கசிப்புக் காய்ச்சுதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.