யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் வீடொன்றில் நேற்று முன்தினம் பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசடி, ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த 8 பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திங்கட்கிழமை பகல் வேளையில் அரச உத்தியோகத்தரான மகன் கடமைக்குச் சென்றிருந்த நிலையில் வயோதிபத் தாயார் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.
இதனைச் சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் வயோதிப தாய் குளியலறைக்குச் சென்ற நிலையில் திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அலுமாரி, கைப்பை ஆகியவற்றில் காணப்பட்ட நகை மற்றும் பணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.